இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணி நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட சென்றுள்ளன. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என வென்று அசத்தியது மேற்கிந்திய தீவுகள்.
தங்களது சொந்த மண்ணில் 25 வருடங்களுக்குப் பிறகு இருதரப்பு ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளனர் மே.இ.தீ. அணியினர்.
அடுத்து டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் மே.இ.தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து தெரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. நிகோலஸ் பூரண் அதிரடியால் 45 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அணியை நிலைநிறுத்தினார். 20 ஓவர் முடிவில் 222/6 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜாஸ் பட்லர் 51 ரன்களுக்கு ஆட்டமிழக்க பிலிப் சால்ட் அதிரடி சதமடித்தார். லிவிங்ஸ்டன் 18 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க: முதலிடத்தில் சிஎஸ்கே: விரக்தியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்!
கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவையானபோது ஹாரி புரூக் ரஸ்ஸல் ஓவரில் விளையாடினார். 4,6,6,2,6 என 5 பந்துகளிலேயே ஆடட்த்தினை முடித்துவிடுவார்.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என தொடரில் மீண்டும் வந்துள்ளது இங்கிலாந்து அணி. மீதமிருக்கும் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடரினை வெல்ல முடியும்.

56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்த பிலிப் சால்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிலர் ஹாரி புரூக்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்திருக்கலாம் எனவும் பாராட்டி வருகின்றனர்.
HARRY BROOK, THE FINISHER.
â Johns. (@CricCrazyJohns) December 17, 2023
England needed 21 runs in the final over then he smashed 4, 6, 6, 2 & 6 to win the must match.
One of the most crazy finishes ever in T20I history. pic.twitter.com/rE494JqBUQ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!

வணிகமயத்தின் பிடியில்...

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றமில்லை: நிா்மலா சீதாராமன்

மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



