நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாமுக்கு ஓய்வா?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அணியில் இடம்பெறமாட்டார்கள் என்ற முடிவை தன்னிச்சையாக எடுக்க மாட்டோம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாமுக்கு ஓய்வா?

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அணியில் இடம்பெறமாட்டார்கள் என்ற முடிவை தன்னிச்சையாக எடுக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அணியில் இடம்பெறமாட்டார்கள் என்ற முடிவை தன்னிச்சையாக எடுக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறியதாவது: பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவருமே தங்களுக்கு ஓய்வு வேண்டும் என கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் ஒருபோதும் கேட்கவில்லை. கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்களிடம் இந்த இரண்டு வீரர்களுக்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வளிக்கும் முடிவை வஹாப் ரியாஸ் ஆலோசனையாக கூறியுள்ளார். இருப்பினும், இந்த இரண்டு முக்கியமான மூத்த வீரர்களின்றி பாகிஸ்தான் அணியால் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட முடியாது எனக் கூறி ரியாஸின் ஆலோசனையை அவர்கள் மறுத்துள்ளனர். இந்த இரண்டு வீரர்களுக்கும் ஓய்வளிப்பது என முடிவு செய்தால் அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com