படம்: ஷிகர் தவான் | இன்ஸ்டாகிராம்
படம்: ஷிகர் தவான் | இன்ஸ்டாகிராம்

மகனே! உன்னைத் தொடர்புகொள்ள முடியவில்லை:  ஷிகர் தவான் உருக்கமான பதிவு! 

பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மகன் குறித்து உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். 
Published on

முதன்முதலாக 2013இல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஷிகர் தவான். 167 ஒருநாள் போட்டிகளில் 6793 ரன்களும் 34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்களும் 217 ஐபிஎல் போட்டிகளில் 6616 ரன்களும் எடுத்துள்ளார். தனது சிறப்பான தொடக்க ஆட்டத்தினால் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.

தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.  ஐபிஎல்-இல் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

ஆயிஷா முகர்ஜியுடன் 2012இல் தவானுக்கு திருமணம் நடைபெற்றது. 2021இல் விவாகரத்தினை பெற்றார்கள்.  இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரது பெயர் ஜோராவர். ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். 

படம்: ஷிகர் தவான் | இன்ஸ்டாகிராம் 
படம்: ஷிகர் தவான் | இன்ஸ்டாகிராம் 

இந்நிலையில் மகனது பிறந்தநாளுக்கு ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாவது: 

உன்னை நேரில் பார்த்து ஒரு வருடமாகப் போகிறது. உன்னை எங்குமே தொடர்பு கொள்ள முடியாமல் கடந்த மூன்று மாதங்களாக (பிளாக்) முடக்கப்பட்டுள்ளேன். அதனால் இந்த ஒரே புகைப்படத்தினையே பதிவிட்டு உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறுகிறேன். 

உன்னை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் டெலிபதியில் உன்னை சந்திக்கிறேன். உன்னை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. சிறப்பாக வளர்கிறாய் என நம்புகிறேன். 

உனது அப்பா எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன். உன்னை மிகவும்  நேசிக்கிறேன்.உனது அப்பா எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் முகத்தில் புன்னகையுடன் காத்திருக்கிறார். கடவுளின் கிருபையினால் நாம் மீண்டும் சந்திப்போம் என நம்புகிறேன்.  குறும்புத்தனங்களுடன் இரு; ஆனால் மோசமாக இருக்காதே. பிறருக்கு உதவுபவராக, பொறுமையாக, பணிவுடன், இரக்க குணம் உள்ளவனாக இரு. 

உன்னை பார்க்காவிட்டாலும்  உனக்காக தினமும் எழுதுகிறேன். உன்னைப் பற்றியும் உனது தினசரி வாழ்க்கை பற்றியும் தினமும் விசாரிக்கிறேன். என்னுடைய வாழ்வில் நான் என்னவெல்லாம் செய்கிறேன் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறேன். லவ் யூ ஜோரா. மிக்க நேசத்துடன் அப்பா எனக் கூறியுள்ளார். 

சிஎஸ்கே வீரர் ஷர்துல் தாக்குர் “விரைவில் சந்தீப்பிர்கள்” என ஆறுதலாக கமெண்ட் செய்துள்ளார். ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்களும் ஆறுதலாம கமெண்ட் செய்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com