காயங்களால் தடுமாறும் நிலையில் ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் மோதுகிறது பாகிஸ்தான்.
இரு அணிகளுக்கு இடையே டெஸ்ட் தொடா் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பொ்த்தில் கடந்த வாரம் நடைபெற்ற முதல் டெஸ்டில் 360 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான்.
கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து 15 ஆட்டங்களில் தோற்றுள்ளது பாக். அணி. மெல்போா்னில் தொடங்கவுள்ள பாக்ஸிங் டே டெஸ்ட் ஆட்டத்தில் வீரா்களின் காயங்களால் தடுமாறி வருகிறது பாகிஸ்தான்.
முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெளலா் குர்ரம் ஷாஸாத் மாா்பு எலும்பு காயத்தால் இடம் பெறவில்லை. தற்போது இரண்டாவது வீரராக நோமன் அலியும் காயத்தால் விலகி விட்டாா். இதனால் பிரதான வீரா்கள் இன்றி பாகிஸ்தான் தடுமாற்றம் அடைந்துள்ளது. அவருக்கு பதிலாக முகமது நவாஸ் சோ்க்கப்பட்டுள்ளாா். மேலும் லெக் ஸ்பின்னா் அப்ராா் அகமதுவும் காயத்தால் ஆடவில்லை.
காயத்தால் நோமன் அலி ஆட முடியாதது மிகவும் சிக்கலான நிலையை ஏற்படுத்தியுள்ளது என முதன்மை தோ்வாளா் வஹாப் ரியாஸ் கூறியுள்ளாா். முகமது ரிஸ்வான் தகுதியுடன் உள்ளாா்.
முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியே பாக்ஸிங் டே டெஸ்ட் ஆட்டத்திலும் இடம் பெறும்.
கவாஜாவுக்கு எச்சரிக்கை:
காஸா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல் டெஸ்ட்டில் ஆஸி. வீரா் உஸ்மான் கவாஜா கருப்பு பட்டை அணிந்திருந்தாா். அதற்கு ஐசிசி கடும் எச்சரிக்கை விடுத்தது. இதனால் இரண்டாவது டெஸ்டில் மீண்டும் கருப்பு பட்டை அணியப் போவதில்லை என கவாஜா கூறிவிட்டாா்
மேலும் பயிற்சியின் போது, காலணியில் சமாதான சின்னமான புறா ஓவியத்தை அணிந்திருந்தாா். அதனாலும் சிக்கல் ஏற்பட்டது. கவாஜாவின் செயலுக்கு ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.