தோனியுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய பாண்டியா!

அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டும். அதுதான் வாழ்க்கை. கூட்டணியில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
தோனியுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசிய பாண்டியா!

தோனி அணியில் இல்லாத நிலையில் அவருடைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக இந்திய டி20 அணியின் கேப்டன் பாண்டியா கூறியுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 234/4 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸி அணி. வெறும் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. பாண்டியா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணியின் இன்னிங்ஸில் 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் ஷுப்மன் கில். ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 24, பாண்டியா 30 ரன்களும் எடுத்தார்கள். 

டி20 தொடரை வென்ற இந்திய கேப்டன் பாண்டியா பேசியதாவது:

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் சிக்ஸர் அடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அடுத்தக்கட்டத்துக்கு நகர வேண்டும். அதுதான் வாழ்க்கை. கூட்டணியில் நான் கவனம் செலுத்த விரும்புகிறேன். எனது அணிக்கும் என்னுடைய பேட்டிங் ஜோடிக்கும் நான் களத்தில் உறுதுணையாக உள்ளேன் என்கிற நம்பிக்கையை அளிக்க விரும்புகிறேன். அணியில் உள்ளவர்களை விடவும் அதிக ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். எனவே எனக்கு அனுபவம் உண்டு. அதைவிடவும் நான் விளையாடும் நிலையில் கிடைக்கும் நெருக்கடியை எதிர்கொள்வது பற்றி கற்றுக்கொண்டுள்ளேன். அதனால் அணியினரும் இதர விஷயங்களும் நிம்மதியாக இருக்கலாம். அதுவே என் குறிக்கோள். அதனால் என்னுடைய ஸ்டிரைக் ரேட் குறையலாம். புதிய வாய்ப்புகளையும் புதிய பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறேன். தோனி ஏற்றுக்கொண்ட பொறுப்பைத் தற்போது நானும் ஏற்றுக்கொள்வது எனக்கு விருப்பமே. அப்போது, சிக்ஸர்கள் அடிப்பதில் ஆர்வமாக இருந்தேன். தற்போது தோனி அணியில் இல்லாததால் எனக்குத் திடீரென பொறுப்புகள் வந்துள்ளன. அதனை எதிர்கொள்வது எனக்கு இயல்பானதாக உள்ளது. அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் கவலை இல்லை. நாங்கள் எண்ணுகிற முடிவுகளும் கிடைக்கின்றன. எனவே இது சரிதான் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com