முத்தரப்பு டி20 போட்டி: இந்தியாவின் வாய்ப்பைப் பறித்த தெ.ஆ. வீராங்கனை!

முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது தென்னாப்பிரிக்க அணி.
தென்னாப்பிரிக்க அணி (கோப்புப் படம்)
தென்னாப்பிரிக்க அணி (கோப்புப் படம்)

முத்தரப்பு டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் ஆனது தென்னாப்பிரிக்க அணி.

முத்தரப்புப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதின. இறுதிச்சுற்றுக்கு முன்பு இந்திய அணி விளையாடிய 4 ஆட்டங்களில் ஒரு தோல்வியும் இன்றி 7 புள்ளிகளைப் பெற்றது. தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியிடம் ஒருமுறை தோற்றது. இதனால் இறுதிச்சுற்றில் இந்திய அணியின் வெற்றி அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது.

ஈஸ்ட் லண்டனில் இறுதி ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 109/4 ரன்களை மட்டுமே எடுத்தது இந்தியா. ஹர்லீன் தியோல் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.  110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட தென்னாப்பிரிக்க தொடக்க வரிசை பேட்டா்களும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். மறுமுனையில் நிலைத்து ஆடிய டிரையான் 2 சிக்ஸா்கள், 6 பவுண்டரிகளுடன் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். 18 ஓவா்களில் 113/5 ரன்களைச் சோ்த்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

இந்திய வீராங்கனை தீப்தி சா்மா தொடா் நாயகியாகவும், தென்னாப்பிரிக்க வீராங்கனை டிரையான் ஆட்ட நாயகியாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.

தென்னாப்பிரிக்க அணி, முதல் 3 விக்கெட்டுகளை 21 ரன்களுக்கு இழந்தது. அதன்பிறகு 5 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் என மேலும் தடுமாறியது. ஆனால் மூத்த வீராங்கனையான டிரையான், அற்புதமாக விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். கோப்பையை வெல்லும் கனவில் இருந்த இந்திய அணிக்குத் தடைக்கல்லாக இருந்தார். கடைசியில் தனது அணியைப் பாதுகாப்பாகக் கரை சேர்த்து கோப்பையைக் கைப்பற்றினார். டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக அரை சதம் எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com