ரஞ்சி கோப்பை: காலிறுதியில் சௌராஷ்டிரா அசத்தல் வெற்றி! 

பஞ்சாபிற்கு எதிரான கடைசிநாள் ஆட்டத்தில் 71 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வானது. 
படம்: ட்விட்டர் | IDCF
படம்: ட்விட்டர் | IDCF

ரஞ்சி கோப்பை அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடக அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் பஞ்சாபை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழத்தி சௌராஷ்டிரா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது.  

காலிறுதியில் பஞ்சாப்-சௌராஷ்டிர அணிகள் ஆடின. கடைசி நாளான சனிக்கிழமை பஞ்சாப் அணி வெற்றி பெற 200 ரன்கள் தேவைப்படுகிறது. அதே நேரம் சௌராஷ்டிர அணிக்கு 8 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில் உள்ளது. ஸ்கோா்: சௌராஷ்டிரா 303, 379, 

பஞ்சாப் முதல் இன்னிங்ஸ் 431, இரண்டாவது இன்னிங்ஸ் 180.பஞ்சாப் அணியில் கேப்டன் மந்தீப் சிங் விக்கெட் இழந்ததும் அணி நிலைக்குழைந்த்து. அவ்ர அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். 

 5 விக்கெட்டுகள் எடுத்த பாரத் புட். 
 5 விக்கெட்டுகள் எடுத்த பாரத் புட். 

சௌராஷ்டிரா அணியில் பார்த் புட் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். தர்மேந்திர சிங் ஜடேஜா 3 விக்கெட்டுகளும், யுவ்ராஜ்சிங் தோதியா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com