இரண்டாவது டெஸ்டில் வார்னருக்கு பதில் மாற்று வீரரா?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது டெஸ்டில் வார்னருக்கு பதில் மாற்று வீரரா?

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோசமான தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அவர் வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போது அவருடைய மோசமான ஃபார்மே தொடர்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்காததால் பெரிய அளவிலான ஸ்கோரை ஆஸ்திரேலியாவால் எடுக்க முடியவில்லை.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கும் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்கள் எடுத்ததே இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி எடுத்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். 

முதல் டெஸ்டில் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தத் தவறியதால் அவருக்குப் பதிலாக டிராவிஸ் ஹெட்டினை அணியில் சேர்ப்பதற்கான ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடது கை சுழற்பந்து வீச்சாளரான மேட் குன்மேன் அணியில் இடம் பிடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற பிப்ரவரி 17 ஆம் தேதி தில்லியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com