குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மேக்ஸ்வெல் ஐந்து ரன்கள் தானே எடுத்தார்?: ஆஸி. பயிற்சியாளர் கேள்வி!

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லைச் சேர்ப்பது குறித்த கேள்விக்கு...

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 5:36 pm IST

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லைச் சேர்ப்பது குறித்த கேள்விக்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.

முதல் இரு டெஸ்டுகளிலும் ஆஸி. பேட்டர்கள் மோசமாக விளையாடியுள்ளார்கள். மேலும் 3 வருடங்கள் கழித்து முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் ஆஸி. ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலியாவின் ஷெஃப்ஃபீல்ட் ஷீல்ட் போட்டிக்கான விக்டோரியா அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், மெல்போர்னில் நடைபெற்று வரும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 5 ரன்கள் எடுத்தார். நண்பருடைய பிறந்த நாள் விழாவில் காலில் காயம் ஏற்பட்டதால் கடந்த நவம்பர் முதல் எந்தவொரு ஆட்டத்திலும் விளையாடாமல் இருந்தார். தற்போது முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுவதால் ஆஸி. அணியில் மேக்ஸ்வெல்லைச் சேர்க்கவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இதுபற்றிய கேள்விக்கு ஆஸி. அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியதாவது:

மேக்ஸ்வெல் ஓர் ஆட்டத்தில் தான் விளையாடியுள்ளார். எவ்வளவு ரன்கள் எடுத்தார், 5? கிளப் கிரிக்கெட்டில் விளையாடி 61 ரன்கள் எடுத்தார். எப்படிப் போகிறது என்று பார்க்கலாம். ஒருநாள் அணி விரைவில் அறிவிக்கப்படும். எல்லாவிதமான பரிசோதனைகளிலும் அவர் தேர்ச்சி அடைந்துவிட்டால் ஒருநாள் தொடரில் நிச்சயம் சேர்க்கப்படுவார். அதைத் தாண்டிய விஷயம் என்றால் விவாதிக்கப்பட்ட பிறகே முடிவு செய்யப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.