இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்துள்ள நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் சதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 483 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்துள்ள நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் சதம்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் 483 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் டெஸ்டை இங்கிலாந்து அணி வென்ற நிலையில் 2-வது டெஸ்ட், வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 87.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 186 ரன்களும் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 153 ரன்களும் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 53.2 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆனது. பிராட் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதன்பிறகு நியூசிலாந்து அணியை மீண்டும் பேட்டிங் செய்ய கட்டளையிட்டது இங்கிலாந்து அணி. இதனால் நியூசிலாந்து அணி மீண்டும் குறைந்த ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியடையுமா என ரசிகர்கள் அச்சப்பட்டார்கள். ஆனால் 2-வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பேட்டர்கள் அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி தந்துள்ளார்கள். 3-ம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி, 83 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 25, நிகோல்ஸ் 18 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள்.

4-ம் நாளான இன்று நியூசிலாந்து அணி மேலும் சிறப்பாக விளையாடி 2-வது இன்னிங்ஸில் 162.3 ஓவர்களில் 483 ரன்கள் எடுத்துள்ளது. டாம் லதம் 83, கான்வே 61, கேன் வில்லியம்சன் 132, டேரில் மிட்செல் 54, டாம் பிளண்டல் 90 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். ஜேக் லீச் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

2-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 258 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராவ்லி 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 23 ரன்களுடனும் ஆலி ராபின்சன் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் கடைசி நாளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 210 ரன்கள் தேவைப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com