ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு அணிக்கு எதிராக 446 ரன்கள் எடுத்த மஹாராஷ்டிரம்
By DIN | Published On : 11th January 2023 03:13 PM | Last Updated : 11th January 2023 03:13 PM | அ+அ அ- |

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மஹாராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 446 ரன்கள் எடுத்துள்ளது.
புணேவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாள் முடிவில் மஹாராஷ்டிர அணி, 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்தது. ருதுராஜ் 118, அஸிம் 87 ரன்களுடன் இருந்தார்கள். இந்நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய மஹாராஷ்டிர அணி, முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களில் 446 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ருதுராஜ் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தமிழக அணியின் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தமிழக அணி, 38 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ஜெகதீசன் 77 ரன்களுக்கும் இந்திரஜித் 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...