வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சென்னைக்கு வந்தார் ஜடேஜா

தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார் பிரபல ஆல்ரவுண்டர் ஜடேஜா.

News image
Updated On :23 ஜனவரி 2023, 11:09 am

தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார் பிரபல ஆல்ரவுண்டர் ஜடேஜா.

காயம் காரணமாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை, ஆசியக் கோப்பைப் போட்டிகளில் இருந்து ஆல்ரவுண்டர் ஜடேஜா விலகினார். முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். இந்திய அணியின் முக்கிய வீரராக ஜடேஜா உள்ளதால் அவர் அணியில் இல்லாதது இந்திய அணிக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதையடுத்து உடற்தகுதியை நிரூபிப்பதற்காக, செளராஷ்டிர அணி தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடவுள்ள ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஜடேஜா விளையாடவுள்ளார். இந்த ஆட்டம் சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது. கடந்த ஜூலைக்குப் பிறகு எந்தவொரு முதல்தர ஆட்டங்களிலும்  ஜடேஜா விளையாடவில்லை. 

இந்நிலையில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி  ஆட்டத்தில் விளையாடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார் ஜடேஜா. வணக்கம் சென்னை என  ட்விட்டரில் பதிவு எழுதியுள்ளார். செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 26 புள்ளிகளைக் கொண்டுள்ள செளராஷ்டிர அணி, அடுத்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. தமிழ்நாடு அணிக்கு எதிராகத் தோற்றாலும் அதனால் பாதிப்பு ஏற்படாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.