கான்வே சதம் வீணானது: தொடரை (3-0) இந்திய அணி முழுமையாக வென்றது! 

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
கான்வே சதம் வீணானது: தொடரை (3-0) இந்திய அணி முழுமையாக வென்றது! 

நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது இந்திய அணி. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் ஆட்டம், இந்தூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணியில் சிப்லிக்குப் பதிலாக ஜகோப் டஃபி தேர்வாகியுள்ளார். இந்திய அணியில் இரு மாற்றங்கள். ஷமி, சிராஜுக்குப் பதிலாக உம்ரான் மாலிக், சஹால் விளையாடினார்கள்.

நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியுள்ளார்கள். இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்துள்ளது. 

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் இரண்டாவது பந்திலே ஆட்டமிழந்தார். டெவோன் கான்வே மட்டும் அதிரடியகா விளையாடி 100 பந்துகளில் 138 ரன்களை எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடங்கும். 

நிகோலஸ் 42 ரன்கள், டேரில் மிட்செல் 24 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்த்த க்ளென் பிலிப்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக 41.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 295 ரன்கள் எடுத்தது. 

இந்தியாவின் சார்பில் ஷர்துல் தாகூர், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளும்,  சஹால் 2 விக்கெட்டுகளும், ஹார்திக் பாண்டியா, உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.  

ஷர்துல் தாகூர் ஆட்டநாயகானக தேர்வு செய்யப்பட்டார். 

90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தத் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com