ஷஃபாலி வர்மா
ஷஃபாலி வர்மா

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: அரையிறுதியில் இந்திய அணியுடன் மோதும் அணி எது?

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 
Published on

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 

குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்திய மகளிர் அணி. சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா. 

இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்வேதா ஷெராவத் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகளின் பட்டியலில் 2-ம் இடத்தில் (231 ரன்கள்) உள்ளார். அதனால் அவருடைய பேட்டிங் இந்திய அணிக்குப் பெரிய பலமாக உள்ளது. ஷஃபாலி வர்மா 5 ஆட்டங்களில் 147 ரன்கள் எடுத்துள்ளார். 

ஜனவரி 27 (நாளை) அன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும் 2-வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளும் மோதவுள்ளன. 

இந்தியா - நியூசிலாந்து மோதும் முதல் ஆட்டம் இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆட்டம் மதியம் 5.15 அணிக்கும் தொடங்கவுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com