யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய மகளிர் அணியின் கொண்டாட்டங்கள்! (படங்கள்)

ஐசிசி போட்டியில் இந்திய மகளிா் அணி ஒன்று சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 
யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய மகளிர் அணியின் கொண்டாட்டங்கள்! (படங்கள்)

பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மகளிருக்காக நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி அறிமுக சாம்பியன் ஆனது. ஐசிசி போட்டியில் இந்திய மகளிா் அணி ஒன்று சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 

யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்திய மகளிர் அணி. சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

தென்னாப்பிரிக்காவின் பாட்சஸ்ட்ரோம் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து 17.1 ஓவா்களில் 68 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 14 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகியாக இந்தியாவின் டைட்டஸ் சாது, தொடா் நாயகியாக இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்கிரீவன்ஸ் ஆகியோா் தோ்வாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com