விரைவில் திருமணம்: பாபா அபரஜித் - தலைவாசல் விஜய் மகள் ஜெயவீணா படங்கள்

பிரபல நடிகர் தலைவாசல் விஜயின் மகளும் நீச்சல் வீராங்கனையுமான ஜெயவீணாவைத் திருமணம் செய்யவுள்ளார்...
படம் - www.instagram.com/aparajithbaba/
படம் - www.instagram.com/aparajithbaba/

பிரபல நடிகர் தலைவாசல் விஜயின் மகளும் நீச்சல் வீராங்கனையுமான ஜெயவீணாவை விரைவில் திருமணம் செய்யவுள்ளார் தமிழ்நாடு கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பாபா அபரஜித்.

28 வயது பாபா அபரஜித் தமிழ்நாடு அணிக்காக 2011 முதல் 90 முதல்தர ஆட்டங்களிலும் 100 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புணே ஜெயண்ட்ஸ் அணிகளில் இடம்பெற்றுள்ளார். இந்திய ஏ அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஜெயவீணா இந்திய அணி சார்பாக ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். 

இந்நிலையில் பாபா அபரஜித் - ஜெயவீணா ஆகிய இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இன்ஸ்டகிராமில் இருவரும் பகிர்ந்த புகைப்படங்களின் தொகுப்பு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com