ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதற்காக வீரர்களுக்கு இழப்பீடு வழங்கினோம்: பிசிபி

நாட்டிற்காக விளையாட வேண்டுமென எங்களது வீரர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளோமென வங்கதேச கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

2023ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருக்க வங்கதேச வீரர்கள் ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், டஸ்கின் அஹமது ஆகியோர்களுக்கு சேர்த்து 65,000 டாலர் (ரூ.53,26,542) இழப்பீடு கொடுக்கப்பட்டதென வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஷகிப் அல் ஹாசன் கேகேஆர் அணிக்காக 2023இல் ஒப்பந்தமாகி பின்னர் விலகினார். அதேபோல லிட்டன் தாஸும் கேகேஆர் அணிக்காக ஒப்பந்தமானார். அயர்லாந்துக்கு எதிரான வங்கதேச போட்டி இருந்ததால்  ஒரேயொரு போட்டியுடன் நாட்டிற்கு திரும்பினார். 

டஸ்கின் அஹமது ஐபிஎல் எலத்தில் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் மாற்று வீரராக அவரை ஐபிஎல் அணிகள் அனுகியதாக பசிபி தெரிவித்துள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த முஷ்தபிகுர் ரஹ்மான் மட்டுமே தில்லி அணிக்காக 2 போட்டிகள் விளையாடினார். 

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர் ஜலால் யூனுஸ் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது: 

வங்கதேச வீரர்கள் இழப்பீடு கேட்கவில்லை. ஆனால் எங்களால் முடிந்த சிறிய உதவியாக இதை செய்தோம். நாட்டின் அணிக்காக விளையாடுவது என்பது நிபந்தனைகளற்ற ஒன்றாகவே பார்க்கிறோம். இருப்பினும் எங்களது வாரியம் அந்தந்த நேரத்துக்கு ஏற்றது போல வீரர்களின் நலமும் எங்களுக்கு முக்கியமானதாக இருப்பதால் அப்படி செய்தோம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com