முதன்முறையாக ஐசிசி மகளிர் தரவரிசையில் முதலிடம் பிடித்த இலங்கை வீராங்கனை! 

ஐசிசியின் மகளிர் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இலங்கையை சேர்ந்த வீராங்கனை முதன்முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 
படம்: ட்விட்டர் | இலங்கை கிரிக்கெட்
படம்: ட்விட்டர் | இலங்கை கிரிக்கெட்

ஐசிசியின் மகளிர் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இலங்கையை சேர்ந்த வீராங்கனை முதன்முறையாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 

33 வயதாகும் சமாரி அதபத்து இலங்கையின் ஆல்ரவுண்டர். 95 ஒருநாள் போட்டிகளில் 3199 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்கள், 15 அரைசதங்கள் அடங்கும். 

நியூசிலாந்து மகளிருக்கு எதிரான போட்டியில் 2 சதங்கள் அடித்தட்தன் மூலம் 758 புள்ளிகளுடன் மகளிர் ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சமாரி அதபத்து. இரண்டாமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மோனே இருக்கிறார். 

சனத் ஜெயசூர்யாவிற்கு பிறகு இலங்கையை சேர்ந்த ஒரு இடதுகை பேட்டர் முதலிடம் வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் அதபத்து- நிலாக்‌ஷி டி சில்வாவுடன் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுவே மகளிரிர் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், இலங்கை மகளிர் அணிக்காக அதிகபட்ச ரன்கள் அடித்த் முதல் பத்து இடங்களிலும் இருப்பது சமாரி அதபத்து என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com