சர்வதேச கிரிக்கெட்டில் 500: சச்சின், தோனியுடன் சாதனைப் பட்டியலில் இணையவுள்ள விராட் கோலி!

இந்திய அணியின்  விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 500-வது போட்டியில் விளையாடி புதிய சாதனையை படைக்க உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 500: சச்சின், தோனியுடன் சாதனைப் பட்டியலில் இணையவுள்ள விராட் கோலி!

இந்திய அணியின்  விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 500-வது போட்டியில் விளையாடி புதிய சாதனையை படைக்க உள்ளார்.

இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி இன்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த புதிய சாதனையை படைக்க உள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இந்திய அணிக்காக 500  சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.  சச்சின் டெண்டுல்கர் (664 போட்டிகள்), எம்.எஸ்.தோனி (538 போட்டிகள்) மற்றும் ராகுல் டிராவிட் (509 போட்டிகள்) சர்வதேசப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர். இந்தப் பட்டியலில் தற்போது விராட் கோலியும் இணைய உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 500 போட்டிகளில் விளையாடியுள்ள 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ள அவர் உலக அளவில் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 10-வது வீரர் என்ற சாதனையையும் படைக்க உள்ளார். ஆல்-ரவுண்டர்களான ஷாகித் அப்ரிடி, சனத் ஜெயசூர்யா மற்றும் ஜாக் காலிஸ் ஆகியோரும் இந்த சாதனைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ளனர். மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து விராட் கோலி மொத்தமாக 75 சதங்கள் விளாசியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் விளாசியுள்ள ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்தாலும் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதல் இடத்தில் இருக்கிறார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 75 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

மூன்று வடிவிலான போட்டிகளிலும் விராட் கோலி 100-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன்மூலம் மூன்று வடிவிலான போட்டிகளிலும் 100-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார். அந்தப் பட்டியலில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் முதல் இடத்தில் உள்ளார்.

இந்திய அணிக்காக இதுவரை 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 8,555 ரன்கள் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 254* ஆகும். 274 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12,898 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 183 ஆகும். இந்திய அணிக்காக இதுவரை 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4008 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 122* ஆகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இன்று நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் விராட் கோலியின் 500 வது சர்வதேசப்  போட்டி மட்டுமின்றி, இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையே நடைபெறும் 100-வது டெஸ்ட் போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com