சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 5-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களில் 5-வது இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி!
Published on
Updated on
1 min read

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாள் ஆட்டத்தின்போது அவர் இந்த சாதனையைப் படைத்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனது 500-வது சர்வதேசப் போட்டியில் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 206 பந்துகளில் 121 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது அசத்தலான சதம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அவரை 5-வது இடத்துக்கு முன்னேறச் செய்தது. 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் தற்போது சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்கள்), குமார் சங்ககாரா(28,016 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (27,483 ரன்கள்), மகேலா ஜெயவர்த்தனே(25,957 ரன்கள்) மற்றும் விராட் கோலி (25,548 ரன்கள்) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். 

25,534 ரன்களுடன் 5-ஆம் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸை பின்னுத் தள்ளி விராட் கோலி 5-ஆம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com