இந்திய மகளிரணி கேப்டன் ஸ்டம்பினை பேட்டால் அடித்து நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு: வைரல் விடியோ!
By DIN | Published On : 23rd July 2023 11:07 AM | Last Updated : 23rd July 2023 11:09 AM | அ+அ அ- |

படம்: ட்விட்டர்
இந்திய மகளிர் அணி வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என இந்திய அணி வென்றது. 3 ஒருநாள் போட்டிகளில் கொண்ட தொடரில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்தவேளையில் நேற்று 3வது போட்டியில் வங்கதேசம் 50 ஓவர் முடிவில் 225/4 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் தொடர் சமநிலையில் முடிந்தது.
இதையும் படிக்க: இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக்
இந்தப் போட்டியில் இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஆட்டமிழந்த விதம் சர்ச்சையானது. நடுவர் எல்பிடபிள்யூ கொடுக்க அதிர்ச்சியான ஹர்மன்ப்ரீத் கௌர் ஸ்டம்பினை பேட்டால் அடித்தும் நடுவரிடம் பேட்டால் பட்டதெனவும் வாதிட்டும் சென்றார். பின்னர் போட்டி முடிந்தப் பிறகு நடுவர்கள் தீர்ப்பு குறித்து தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்தார்.
ஹர்மன்ப்ரீத் கௌர் செயலுக்கு எதிர்ப்பும் ஆதரவும் எழுந்துள்ளது. இந்த விடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Harmanpreet Kaur Hits The Stumps With Her Bat In Anger After On-Field Umpire Rules Her LBW In 3rd ODI pic.twitter.com/09SVb8mF8C
— Nibraz Ramzan (@nibraz88cricket) July 22, 2023
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...