

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் வலுவாக உள்ளது.
பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் இலங்கை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், இலங்கைக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த டெஸ்ட் தொடர் வெற்றி மூலம் பாகிஸ்தான் அணிக்கு 24 புள்ளிகள் கிடைத்துள்ளது. அந்த அணியின் புள்ளிகள் சதவிகிதம் 100 சதவிகிதமாக உள்ளது. பாகிஸ்தான் அடுத்தபடியாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் புள்ளிகள் சதவிகிதம் 66.67 ஆக உள்ளது. ஆஸ்திரேலியா (26 புள்ளிகள் - 54.17 சதவிகிதம்) மூன்றாவது இடத்திலும், இங்கிலாந்து (14 புள்ளிகள் - 29.17 சதவிகிதம்) நான்காவது இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகள் (4 புள்ளிகள் - 16.67 சதவிகிதம்) ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2025 ஆம் ஆண்டு ஜூனில் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.