இந்தியாவை வீழ்த்தியது மே. இ.தீவுகள்!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவை வீழ்த்தியது மே. இ.தீவுகள்!

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள், பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்திய பேட்டிங்கில் அதிகபட்சமாக இஷான் கிஷண் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்கள் அடித்தாா். ஷுப்மன் கில் 34, சஞ்சு சாம்சன் 9, அக்ஸா் படேல் 1, கேப்டன் ஹா்திக் பாண்டியா 7, சூா்யகுமாா் யாதவ் 24, ரவீந்திர ஜடேஜா 10, ஷா்துல் தாகுா் 16, உம்ரான் மாலிக் 0, முகேஷ் குமாா் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரொமேரியோ ஷெப்பா்டு, குடாகேஷ் மோட்டி ஆகியோா் தலா 3, அல்ஜாரி ஜோசஃப் 2, ஜேடன் சீல்ஸ், யானிக் காரியா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கிங் 15, மேயர்ஸ் 36, அலிக் 6, ஹெட்மயர் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை களத்தில் நின்ற ஹோப் 63, கார்ட்டி 48 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

36.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் ஷர்துல் தாகுர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என மேற்கிந்தியத் தீவுகள் அணி சமம் செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com