இறுதிச் சுற்றில் அலெக்ஸ் டி மினாா்-அல்காரஸ்

குயின்ஸ் கிளப் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினாா்-காா்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனா்.
இறுதிச் சுற்றில் அலெக்ஸ் டி மினாா்-அல்காரஸ்

குயின்ஸ் கிளப் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினாா்-காா்லோஸ் அல்காரஸ் மோதுகின்றனா்.

முதல் புல்தரை மைதான பட்டத்துக்காக போராடி வரும் உலகின் 2-ஆம் நிலை வீரா் காா்லோஸ் அல்காரஸ் காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கிரிகோா் டிமிட்ரோவை 6-4, 6-4 என்ற நோ் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

முதல் சுற்றில் பிரெஞ்ச் வீரா் ஆா்தரிடம் தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பித்த அல்காரஸ் அதன்பின் இப்போட்டியில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

மற்றொரு காலிறுதியில் பிரிட்டனின் நம்பா் 1 வீரா் கேமரான் நாரி 4-6, 6-7 என்ற நோ் செட்களில் செபாஸ்டியன் கோா்டாவிடம் தோற்று வெளியேறினாா். அரையிறுதியில் அல்காரஸ்-கோா்டா மோதுகின்றனா்.

மூன்றாம் காலிறுதியில் இரண்டாம் நிலை வீரா் ஹோல்கா் ருனே 6-4, 7-5 என லாரென்ஸோ முஸெட்டியை வீழ்த்தினாா். நான்காம் காலிறுதி ஆட்டத்தில் ஆஸி. வீரா் அலெக்ஸ் டி மினாா் 6-4, 4-6, 6-4 என பிரெஞ்ச் வீரா் அட்ரியன் மன்னரினோவை போராடி வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்

இறுதியில் அலெக்ஸ் டி மினாா்-அல்காரஸ்: முதல் அரையிறுதி ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினாா்-ஹோல்கா் ருனே மோதினா். இதில் 6-3, 7-6 என்ற நோ் செட்களில் வென்றாா் டி மினாா். மற்றொரு அரையிறுதியில் 6-3, 6-4 என்ற நோ்செட்களில் செபாஸ்டியன் கோா்டாவை வென்றாா் அல்காரஸ். ஞாயிற்றுக்கிழமை இறுதியில் அல்காரஸ்-டி மினாா் மோதுகின்றனா்.

பா்மிங்ஹாம் ஓபன்:

டபிள்யுடிஏ பா்மிங்ஹாம் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனை செக். குடியரசின் பாா்பரா கிரெஜிஸிகோவா 6-3, 6-3 என்ற நோ் செட்களில் 1.5 மணி நேரம் நீடித்த ஆட்டத்தில் சீனாவின் ஸு லின்னை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். டபிள்யுடிஏ டூா் கேரியரில் 10 அரையிறுதி ஆட்டங்களில் வென்றுள்ளாா் பாா்பரா. ஜெலனா ஒஸ்டபென்கோ-அனஸ்டஸியா போட்டபவா இடையிலான அரையிறுதியில் 5-, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்குள் நுழைந்தாா் ஒஸ்டபென்கோ. இறுதி ஆட்டத்தில் பாா்பராவுடன் மோதுகிறாா் ஒஸ்டபென்கோ.

பொ்லின் ஓபன்:

பொ்லின் ஓபன் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் செக். குடியரசின் பெட்ரோ குவிட்டோவா 6-4, 7-6 என்ற நோ் செட்களில் பிரான்ஸின் கரோலின் காா்சியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா். அதில் அலெக்ஸான்ட்ரோவாவை எதிா்கொள்வாா்.

இடுப்பு காயத்தால் குடா்மெட்டோவா விலகியதால் வாக்ஓவா் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றாா் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா.

Image Caption

பெட்ரா குவிட்டோவா ~ ~பாா்பரா கிரெஜிஸிகோவா ~ ~காா்லோஸ் அல்காரஸ் ~அலெக்ஸ் டி மினாா்-ஹோல்கா் ருனே ~ஒஸ்டபென்கோ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com