மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

3-வது டெஸ்ட்: 109 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

உமேஷ் யாதவ் 13 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

News image
Updated On :1 மார்ச் 2023, 7:28 am

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இந்தூரில் நடைபெறும் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். 

முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா இருமுறை அவுட் ஆக வாய்ப்பிருந்த போதும் நடுவரின் தவறால் தப்பிப் பிழைத்தார். ஆஸி. அணியும் டிஆர்எஸ்ஸைப் பயன்படுத்தாததால் நல்ல வாய்ப்பை இழந்தது. எனினும் தலா 3 பவுண்டரிகளில் அடித்து 12 ரன்களில் ரோஹித் சர்மாவும் 21 ரன்களிலும் ஷுப்மன் கில்லும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு வரிசையாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. கோலி மட்டும் அதிகபட்சமாக 52 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் எடுத்து மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா 1 ரன், ஜடேஜா 4 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் டக் அவுட், பரத் 17 ரன்கள் என இதர பேட்டர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.  

இந்திய அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 26 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. 6 ரன்களுடன் அக்‌ஷர் படேலும் 1 ரன்னுடன் அஸ்வினும் களத்தில் இருந்தார்கள்.  

இதற்குப் பிறகு இந்திய அணியின் மீதமுள்ள மூன்று விக்கெட்டுகளும் வீழ்ந்தன. அஸ்வின் 3 ரன்கள், உமேஷ் யாதவ் 17 ரன்களும் எடுத்தார்கள். சிராஜ் டக் அவுட் ஆனார். உமேஷ் யாதவ் 13 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் அடித்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 33.2 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. மேத்யூ குனேமன் 5 விக்கெட்டுகளும் லயன் 3 விக்கெட்டுகளும் மர்ஃபி 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.