சிட்னி டெஸ்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர் விலகினார். சிகிச்சைக்காக உடனடியாகக் குடும்பத்தினருடன் சிட்னிக்குத் திரும்பியுள்ள வார்னர், டெஸ்ட் தொடருக்குப் பிறகு நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளார்.
இந்நிலையில் ஐசிசி ரெவ்யூ ஷோ நிகழ்ச்சியில் டேவிட் வார்னர் பற்றி ரிக்கி பாண்டிங் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் விளையாடிய சிட்னி டெஸ்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து டேவிட் வார்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெல்போர்னில் 100-வது டெஸ்டை விளையாடிய வார்னர், இரட்டைச் சதமெடுத்தார். அடுத்து விளையாடிய சிட்னி டெஸ்டுடன் அவர் ஓய்வு பெற்றிருந்தால், சொந்த ஊரில் அனைவர் முன்பும் ஓய்வு பெறும் பலருடைய கனவு அவருக்கு நிறைவேறியிருக்கும். அந்த வாய்ப்பு மீண்டும் வராமல் போகலாம். அதற்கு இன்னும் 12 மாதங்கள் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் வார்னரை விளையாட வைப்பார்கள் என நினைக்கிறேன். எனினும் மற்ற நாடுகள் போல இங்கிலாந்தில் வார்னர் அவ்வளவு நன்றாக விளையாடியதில்லை. தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை எப்படி முடிக்க வேண்டும் என்கிற விருப்பத்தை வார்னருக்கு அளிக்க வேண்டும். அணியிலிருந்து நீக்கப்படுவதுடன் அவருடைய டெஸ்ட் வாழ்க்கை முடியக்கூடாது என்றார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 டெஸ்டுகளில் விளையாடியுள்ள வார்னர், 25 சதங்களுடன் 8158 ரன்கள் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பந்துவீச்சு!

மஹிந்திரா & மஹிந்திரா 4வது காலாண்டு லாபம் 48.5% உயர்வு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


