உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 4-வது டெஸ்டிலும் இந்தியா தோற்றால் என்ன ஆகும்?

ஒருவேளை 4-வது டெஸ்டில் இந்தியா தோற்றுவிட்டால்? சரி, டிரா செய்தாலாவது வாய்ப்பு கிடைக்குமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 4-வது டெஸ்டிலும் இந்தியா தோற்றால் என்ன ஆகும்?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.

3-வது டெஸ்டை இந்திய அணி வென்றிருந்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்கும். பதிலாக, ஆஸ்திரேலியா அணி வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளது.

இதனால் 4-வது டெஸ்டை வென்றால் மட்டுமே இந்திய அணியால்  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற முடியும்.

ஒருவேளை 4-வது டெஸ்டில் இந்தியா தோற்றுவிட்டால்? சரி, டிரா செய்தாலாவது வாய்ப்பு கிடைக்குமா? (இந்தியாவில் மூன்று நாள்களையே டெஸ்டுகள் தாண்டுவதில்லை, இதில் டிரா ஆகவும் வாய்ப்புள்ளதா?)

4-வது டெஸ்டை இந்தியா வென்றால் 60.29% உடன் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டுகளில் இலங்கை வென்றாலும் அதனால் இந்தியாவுக்குப் பாதிப்பு நேராது.

ஒருவேளை இந்திய அணி 4-வது டெஸ்டை டிரா செய்தால்? இப்போது இலங்கையின் தயவு இந்திய அணிக்குத் தேவைப்படும். இலங்கை அணி 2-0 என நியூசிலாந்துத் தொடரை வெல்லாமல் இருந்தால் இந்திய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.

இதுதான் முக்கியமான கேள்வி. ஒருவேளை இந்திய அணி 4-வது டெஸ்டிலும் தோல்வியடைந்தால்?

அப்போதும் இலங்கையின் தயவு தேவைப்படும். இலங்கை எக்காரணம் கொண்டும் 2-0 என வெற்றி பெறாமல் போனால் அந்த அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. இதனால் இந்திய ரசிகர்களின் பார்வையில் பார்க்க வேண்டுமென்றால், கடைசி டெஸ்டில் இந்திய அணி தோற்றாலும் டிரா செய்தாலும் இலங்கை மட்டும் 2-0 என நியூசிலாந்தில் வென்றுவிடக்கூடாது. 

மற்றபடி ஆமதாபாத் டெஸ்டை இந்தியா வென்றுவிட்டால் நியூசிலாந்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கத் தேவையில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com