சாதனை நாயகன்: ரச்சின் ரவீந்திரா! 

உலகக் கோப்பை போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா.
சாதனை நாயகன்: ரச்சின் ரவீந்திரா! 

நியூசிலாந்து அணிக்காக உலகக் கோப்பையில் களமிறங்கிய தனது முதல் போட்டியிலேயே ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

உலகக் கோப்பையில் அறிமுகப் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அதிவேகமாக சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளதே அதற்கு காரணம். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 82 பந்துகளில் அவர் சதம் விளாசினார். 

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவரான ரவி கிருஷ்ணமூர்த்தி அவரது சொந்த ஊரான பெங்களூருவில் கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் திராவிட்டின் மீது உள்ள அன்பினால் தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டில் இருந்து  ‘ர’ வையும் சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து ‘ச்சின்’ இரண்டையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார். 

உலகக் கோப்பை போட்டியில் பல சாதனைகளை படைத்து வருகிறார் இளம் வீரர்  ரவீந்திரா.  அதிக ரன்கள் பட்டியலில் டி காக்கிற்கு (545) அடுத்து ரச்சின் ரவீந்திரா (522) இருகிறார். 

108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரச்சின். உலகக் கோப்பையில் இது இவரது 3வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாதனைப் பட்டியல்கள்: 

  • அறிமுக உலகக் கோப்பை தொடரில்  அதிக (5) அரைசதம் அடித்தவர்
  • நியூசிலாந்துக்காக ஒரே உலகக் கோப்பை போட்டியில் அதிக முறை 50+ அடித்தவர். 

 முதல் உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: 

  • ரச்சின் ரவீந்திரா - 522 (8 இன்னிங்ஸ்) 
  • ஜானி பெயர்ஸ்டோ - 532  (11 இன்னிங்ஸ்)
  • பாபர் ஆஸம் - 474 (8 இன்னிங்ஸ்) 
  • பென் ஸ்டோக்ஸ் - 465 (10 இன்னிக்ஸ்) 

25 வயதுக்குள்ளாக உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்: 

  • ரச்சின் ரவீந்திரா - 522 (2023)*
  • சச்சின் டெண்டுல்கர் - 523 (1996) 
  • பாபர் ஆஸம் - 464 (2019) 
  • ஏபிடி வில்லியர்ஸ்-  372 (2007)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com