உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என தென்னாப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று (நவம்பர் 5) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் அபார பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: தொடர் தோல்வி: இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு
இந்த நிலையில், உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு முன்னதாக எங்களது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும் என கேசவ் மகாராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டி இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கான ஒரு முன்னோட்டம் என நான் நினைக்கிறேன். அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் எங்களது தவறுகளை அடையாளங்கண்டு திருத்திக் கொள்ள வேண்டும். நாங்கள் கடந்த போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். அந்த சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும்.
இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர்கள்!
சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு இந்தியாவுக்கு எதிரான தோல்வி முற்றுப்புள்ளி வைத்து எங்களை விழித்துக் கொள்ளச் செய்துள்ளது. நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஜடேஜா மிகச் சிறப்பாக பந்துவீசினார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு!

ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! கொந்தளித்த மாணவர்கள்

செல்வாக்கு மிக்க டாப் 10 இந்திய நடிகைகள் யார் யார்?
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!



