பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

டி20, ஒருநாள் போட்டிகளில் இவர் மிகச் சிறந்த வீரர்: ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

பேட்ஸ்மேன்களின் மனதை சரியாக கணிக்கும் திறன் கொண்ட ஆடம் ஸாம்பா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 நவம்பர் 2023, 10:08 am

DIN


பேட்ஸ்மேன்களின் மனதை சரியாக கணிக்கும் திறன் கொண்ட ஆடம் ஸாம்பா டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.

ஐசிசி இணையதளத்தில்  எழுதியுள்ள ஆரோன் ஃபின்ச் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: ஆடம் ஸாம்பா சிறப்பாக செயல்படுகிறார். அவர் ரன்கள் கொடுக்காமல் பந்துவீசும்போது பேட்ஸ்மேன்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. தனது சிறப்பான பந்துவீச்சை ஸாம்பா தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில்  உலகின் சிறந்த பந்துவீச்சாளராக வலம் வருகிறார். பனித்துளி உள்ள மோதேரா மைதானத்தில் இங்கிலாந்தின்  மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோரது விக்கெட்டை அவர் அற்புதமாக வீழ்த்தினார்.

Story image

இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் 10  ஓவர்களை வீசிய அவர் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 பெரிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது கிரிக்கெட் பயணத்தில் இந்தப் போட்டியில் மிகவும் குறைவான ரன்களை விட்டுக் கொடுத்து முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். பேட்ஸ்மேன்களின் மனநிலையைக் கணித்து அவர் பந்துவீசும் விதம் எனக்கு  மிகவும் பிடிக்கும் என்றார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள ஆடம் ஸாம்பா அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.