உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர்!
By DIN | Published On : 07th November 2023 05:36 PM | Last Updated : 07th November 2023 05:47 PM | அ+அ அ- |

உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை அந்த அணியின் இப்ராஹிம் ஸ்த்ரான் படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்து வருகிறது.
இதையும் படிக்க: ஓராண்டில் அதிக ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் வீரர்!
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இப்ராஹிம் ஸ்த்ரான் 131 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவரது இந்த சதத்தின் மூலம் உலகக் கோப்பையில் சதம் விளாசிய முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் வீரர் சமியுல்லா ஷின்வாரி உலகக் கோப்பையில் 96 ரன்கள் எடுத்திருந்ததே தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
ஒருநாள் போட்டிகளில் இப்ராஹிம் ஸ்த்ரானின் 5-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...