டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலிலும் 7-வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. தொடர்ந்து 5 போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு நெதர்லாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இங்கிலாந்து அணியை வழிநடத்த விரும்புகிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ராப் கீ இந்தியாவிற்கு வந்து இங்கிலாந்து அணியுடன் இணைய உள்ளார் என்பது எனக்குத் தெரியும். அவரிடம் போட்டி குறித்து பேசுவோம். அடுத்த மாதம் வரவிருக்கும் தொடர்கள் குறித்து ஆலோசிப்போம். என்னால் அணிக்காக ரன்கள் குவிக்க முடியாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அதிலிருந்து மீண்டு ஃபார்முக்கு வருவேன். இந்த உலகக் கோப்பைத் தொடர் மிக முக்கியமானதாக எங்களுக்கு அமைந்துள்ளது. நாங்கள் நினைத்தது போன்று இந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. நேற்றையப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்றார்.
இதையும் படிக்க: ஐசிசி ஒருநாள் தரவரிசை: கில், சிராஜ் முதலிடம்
இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை மறுநாள் (நவம்பர் 11) எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


