ஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

இறுதிப்போட்டியில் இதைச் செய்யாதீர்கள்; இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அறிவுரை!

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி எந்த ஒரு புதிய விஷயத்தையும் முயற்சிக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 நவம்பர் 2023, 10:04 am

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி எந்த ஒரு புதிய விஷயத்தையும் முயற்சிக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் நாளை மறுநாள் (நவம்பர் 19) அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி மிகவும் பதற்றமின்றி இருப்பதாக நினைக்கிறேன். அனுபவம் வாய்ந்த இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது. இதுவரை இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் முயற்சிக்க வேண்டாம். இதுவரை விளையாடியது போன்றே இறுதிப்போட்டியிலும் விளையாடுங்கள். இந்திய அணி உலகக் கோப்பையை கண்டிப்பாக வெல்லும்.

இறுதிப்போட்டியில் இந்திய அணி பதற்றமடையத் தேவையில்லை. வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டியிலும்  வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்து வருவது இந்திய அணியின் பலமாக உள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக உள்ளது. தற்போது இருக்கும் இந்திய அணி மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையைக் கொண்டுள்ளது  என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.