உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்ட கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நிறைவடைந்தது. இந்த தொடரில் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக சாம்பியன் ஆனது.
இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் உள்ளடங்கிய கனவு அணியை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
ஐசிசி கனவு அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி ஆகிய 5 இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, தென்னாப்பிரிக்கா குயிண்டன் டி காக், ஜெரால்ட் கோட்ஸீ, நியூசிலாந்து டேரில் மிட்செல், இலங்கை தில்ஷன் மதுஷங்க ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.