தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? பிசிசிஐ முடிவு என்ன?

உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்டர் விராட் கோலி விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரோஹித், கோலி

Published On :

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர பேட்டர் விராட் கோலி விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை ஒருநாள் தொடரில் இந்தியா கோப்பை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை, 2025-இல் நடைபெறவுள்ள ஒருநாள் சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட ஐசிசி தொடர்களில் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிசிசிஐ பொறுத்தவரை டி20 போட்டிகளில் தொடர்ந்து இளம் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. கடந்த ஓராண்டாக டி20 போட்டிகளில் ரோஹித் மற்றும் விராட் கோலி விளையாடவில்லை. ஹார்திக் பாண்டியாவே கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருப்பதால் இன்று ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள போட்டிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 போட்டிக்கு ஹார்திக் பாண்டியா தலைமையிலேயே இந்திய அணி களமிறங்க பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது.

மேலும், டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித்தும், கோலியுமே முடிவெடுத்துக் கொள்ள பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கோப்பையின்போது ரோஹித் மற்றும் கோலிக்கு கிட்டத்திட்ட 40 வயதாகிவிடும் என்பதால் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணியை தயார் செய்யும் எண்ணத்தில் பிசிசிஐ உள்ளது.

இதனடிப்படையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ரோஹித்தும், கோலியும் விரைவில் ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.