தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தோனி - ரெய்னா சந்திப்பு: வைரல் புகைப்படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, ரெய்னா சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தோனி - ரெய்னா சந்திப்பு

Published On :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் மகேந்திர சிங் தோனி, ரெய்னா சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய அணியின் கேப்டனாக தோனி செயல்பட்ட போது, அணியின் தவிர்க்க முடியாத வீரராக ரெய்னா விளையாடினார். பல்வேறு போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ரெய்னா காரணமாக இருந்துள்ளார்.

அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தலைமையில் பல ஆண்டுகள் துணைக் கேப்டனாக விளையாடியுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

விளையாட்டை தவிர்த்து தனிப்பட்ட வாழ்க்கையில் தோனியும், ரெய்னாவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். இருவரும் இந்திய அணியிலிருந்து ஒரே நாளில் ஓய்வும் பெற்றனர்.

இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன்காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவை ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் பரவின.

கடந்த ஐபிஎல் சீசனில் வர்ணனையாளராக செயல்பட்ட ரெய்னா தோனியை சந்தித்துப் பேசி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்துக்கு நேரில் சென்ற ரெய்னா அவரை சந்தித்துப் பேசினார்.

Story image

அப்போது தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரெய்னா, இரவு விருந்துக்கு நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.