/

ஆஸி.க்கு எதிராக சதமடித்த முதல் இந்தியர்: ருதுராஜின் சாதனைகள்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் முதல் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றார்.

News image

ருதுராஜ் கெய்க்வாட்

Updated On :2 பிப்ரவரி 2024, 8:57 am IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் முதல் சதமடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் பெற்றார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நேற்று குவாஹாட்டியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 222 குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

இந்தப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்கள் (13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள்) குவித்து சர்வதேச டி20-யில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மேலும், சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன் எடுத்த இரண்டாவது வீரர்(ஷுப்மன் கில் 126 முதலிடம்), கடைசி 3 ஓவர்களில் அதிகபட்ச ரன்கள்(52) எடுத்த இரண்டாவது வீரர்(யுவராஜ் சிங் 54 முதலிடம்) என்ற சாதனைகளை படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.