டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறியதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இணைவதற்கு முன்பாக ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரின் முதல் மூன்று சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக விளையாடினார். அதன்பின், ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணியால் வாங்கப்பட்ட டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார்.
இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற உகாண்டா!
இந்த நிலையில், டெல்லி டேர்டெவில்ஸ் அணி தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறியதாக ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் டி வில்லியர்ஸ் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது, டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகத்திடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது நிர்வாகத்தின் தரப்பிலிருந்து அடுத்த சீசனுக்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் உங்களைத் தக்கவைக்கப் போகிறோம் என்றார்கள். அந்த சந்திப்பின்போது டேவிட் வார்னர் எனக்கு அருகே அமர்ந்திருந்தார். ஆனால், ஒரு வாரத்துக்குப் பிறகு நான் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதாக வந்த அறிவிப்பைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அந்த அறிவிப்பு எனக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. அந்தக் காலக்கட்டத்தில் பெரிதாக தகவல் தொடர்பு வளர்ச்சி என்பது கிடையாது. இருந்தும், அந்த அறிவிப்பு எனக்கு நல்ல உணர்வுகளைக் கொடுக்கவில்லை.
நான் அந்த ஆண்டு (2010) ஐபிஎல் சீசனில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தேன். அதனால், எனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து சிறிது பதற்றமாக இருந்தேன். நிறைய சந்தேகங்கள் என்னைத் தொற்றிக் கொண்டது. ஆனால், சர்வதேசப் போட்டிகளில் அப்போது நான் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தேன். அதிர்ஷ்டவசமாக ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. நான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டேன். அது எனது கிரிக்கெட் பயணத்தை எப்போதும் நினைவுகூறும் விதமாக மாற்றியது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



