இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறி விட்டோம்: ஸ்டீவ் ஸ்மித்

இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இந்திய சுழற்பந்துவீச்சில் தடுமாறி விட்டோம்: ஸ்டீவ் ஸ்மித்

இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடியது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர். 110 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலிய அணியை சாய்த்தனர். குறிப்பாக ரவீந்திர ஜடேஜா 38  ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இந்த நிலையில், இந்திய சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டதாக ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அவர்கள் அனைவரும் சிறந்த தரமான பந்துவீச்சாளர்கள் என்பதால், அவர்களது பந்துவீச்சை எதிர்கொள்வது சவாலனதாக இருந்தது. அவர்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்பட்டார்கள். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம். விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அருமையாக பேட்டிங் செய்தனர் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com