உலகக் கோப்பையில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் டேவிட் வார்னர்!

உலகக் கோப்பையில் தனது 5-வது சதத்தை ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இன்று (அக்டோபர் 20) நிறைவு செய்தார்.
உலகக் கோப்பையில் புதிய சாதனையை நோக்கிப் பயணிக்கும் டேவிட் வார்னர்!

உலகக் கோப்பையில் தனது 5-வது சதத்தை ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இன்று (அக்டோபர் 20) நிறைவு செய்தார்.

உலகக் கோப்பையில் பெங்களூருவில் நடைபெற்று வரும் இன்றயைப் போட்டியில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 163 ரன்கள் எடுத்தார். உலகக் கோப்பையில் இது அவருடைய 5-வது சதமாகும். 

இன்று சதம் விளாசியதன் மூலம் உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்துள்ள ரிக்கி பாண்டிங் மற்றும் குமார் சங்ககாராவின் சாதனையை வார்னர் சமன் செய்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் 6 சதங்களுடன் சச்சினின் சாதனையை அவர் சமன் செய்வார். இந்தப் பட்டியலில் 7 சதங்களுடன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதல் இடத்திலும், 6 சதங்களுடன் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com