மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இனிவரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம்: பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்!

பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் வெற்றி பெற முடியவில்லை என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சஃபீக் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 அக்டோபர் 2023, 10:42 am

DIN

பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் வெற்றி பெற முடியவில்லை என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சஃபீக் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 20) நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 62 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு 368 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

368  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். அந்த அணி 134 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா சஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் முறையே 64 ரன்கள் மற்றும் 70 ரன்கள் குவித்தனர். இருப்பினும், பாகிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் வெற்றி பெற முடியவில்லை என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சஃபீக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது. நாங்கள் எங்களது முழு முயற்சியையும் அளித்தோம். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம். எங்களிடம் பேட்டிங்கும் சிறப்பாகவே இருந்தது. ஆனால், ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அதில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் போட்டியில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.