
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய பாகிஸ்தான் அணியை பார்ப்பீர்கள் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியைத் தழுவியது. 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த போட்டியில் பாகிஸ்தான் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம், தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய பாகிஸ்தான் அணியை பார்ப்பீர்கள் என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நாங்கள் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளோம். நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம். போட்டி நடைபெறும் நாளில் நீங்கள் எவ்வாறு விளையாடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். போட்டிக்கு முன்பு எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், போட்டியின்போது எவ்வாறு செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் நிறைய பேசிவிட்டோம். நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பாகிஸ்தான் அணியைக் காண்பீர்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.