தொடர் தோல்விகள்... அரையிறுதிக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்?

உலகக் கோப்பை போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
தொடர் தோல்விகள்... அரையிறுதிக்கு தகுதி பெறுமா பாகிஸ்தான்?
Published on
Updated on
1 min read

உலகக் கோப்பை போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் உலகக் கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றன. தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வரும் நிலையில், முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறவுள்ளன.

இதுவரை விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 5 வெற்றிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மேலும், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி அடுத்து விளையாடவுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய வாய்ப்புள்ளது.

இதுவரை பாகிஸ்தான் விளையாடிய 5 போட்டிகளில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் மோதிய முதல் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மோதிய கடைசி மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான்.

அடுத்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் மோதும் போட்டியில் ஒன்றில் தோல்வி அடைந்தால்கூட அரையிறுதி வாய்ப்பு மிகக் குறைவுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com