ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதனை!

இந்தப் போட்டிகளில் இந்தியா இதுவரை 80 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதனை!
Published on
Updated on
1 min read

சீனாவில் நடைபெற்று வரும் மாற்று திறனாளிகளுக்கான ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் இதுவரை 80 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

போட்டிகள் முடிய இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, 2018-ல் இந்தோனேஷியாவில் பெற்ற 72 பதக்கங்களே முன்பு அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

18 தங்கம், 23 வெள்ளி மற்றும் 39 வெண்கல பதக்கங்கள் உள்பட 80 பதக்கங்களை இதுவரை இந்திய வீரர்- வீராங்கனைகள் வென்றுள்ளனர்.

இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்தியா, 100 பதக்கங்கள் என்னும் இலக்கில் முனைப்பாக உள்ளது.

இந்தப் போட்டிகள் அக்.22 ஆரம்பித்து அக். 28 வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து 303 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com