கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு நேர்ந்த சோதனை!

உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2023, 11:01 am

உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது.

உலகக் கோப்பையில் சென்னை  சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. நேற்றைப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தனது 4-வது தோல்வியை சந்தித்துள்ளது.

உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் இதுபோன்று தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

கடந்த 4 போட்டிகளில் பாகிஸ்தான் 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக - ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக  - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக  - 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியாவுக்கு எதிராக - 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.