இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷதாப் கானுக்கு பயப்படும்படியான காயம் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை. பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு ஒன்றிரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டபோது அவர் கேமரா முன்பு அணியின் வெற்றிக்காக கைத்தட்டி உற்சாகப்படுத்தினார். அதற்கு அர்த்தம் என்ன? 24 கோடி பாகிஸ்தான் மக்களின் உணர்வுகளோடு நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றே அர்த்தம். இது ஒன்றும் வேடிக்கையல்ல. ஃபீல்டிங்கின்போது ஷதாப் கானுக்கு அடிபட்டது. ஆனால், அவர் சிறிது நேரத்தில் மீண்டும் ஃபீல்டிங்குக்கு வந்தார். அதன்பின் அவருக்குப் பதிலாக உசாமா மிர் ஃபீல்டிங்குக்கு வந்தார். போட்டியின் அழுத்தத்திலிருந்து தப்பிக்க அவர் இவ்வாறு செய்ததாக நான் நினைக்கிறேன். கைகள் உடைந்தும் அணியின் நலனுக்காக விளையாடிய வீரர்களை எனக்குத் தெரியும் என்றார்.