மைதானத்துக்கு பேட்டே கொண்டு வரவில்லை: கே.எல். ராகுல்

டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பாக தான் விளையாடப் போவதாக தெரியும் என்று இந்திய வீரர் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.
கே.எல். ராகுல்
கே.எல். ராகுல்

டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பாக தான் விளையாடப் போவதாக தெரியும் என்று இந்திய வீரர் கே.எல். ராகுல் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி நேற்று வீழ்த்தியது.

முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 122, ராகுல் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி, 32 ஓவா்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய ஸ்பின்னா் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய கே.எல்.ராகுல்,

“டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்புதான், ராகுல் திராவிட் என்னிடம் வந்து விளையாடப் போவதாக கூறினார். ஸ்ரேயால் ஐயருக்கு கடைசி நேரத்தில் முதுகு பிடிப்பு ஏற்பட்டதால் நான் விளையாட வேண்டிய சூழல் எழுந்தது.

ஆனால், மைதானத்துக்கு என்னுடைய பேட், ஜெர்ஸி உள்ளிட்டவை கொண்டு வரவே இல்லை. முழுக் கை ஜெர்ஸியுடன் மைதானத்துக்குள் தண்ணீர் பாட்டில் கொடுக்கும் வேலை செய்வேன் என்று நினைத்தேன்.

கடைசி நேரத்தில் ஹோட்டலுக்கு சென்று மேலாளர் எனது பேட் உள்ளிட்ட உபகரணங்களை எடுத்து வந்தார்.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com