புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்: ஜியோ சினிமாவில் இலவசமாக காணலாம்!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 2:44 pm

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 

இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாகப் பார்க்கலாம் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜியோ நிறுவனம் தரப்பில் கூறியிருப்பதாவது: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக காணலாம். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 11 மொழிகளில் ஜியோ சினிமாவில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெறும் தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி விவரம்

செப்ம்பர் 22 - முதல் ஒருநாள் போட்டி 
செப்டம்பர் 24 - இரண்டாவது ஒருநாள் போட்டி
செப்டம்பர் 27 - மூன்றாவது ஒருநாள் போட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.