ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார்?

ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார்?
படம் | ஐசிசி

ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை ஐசிசி தேர்ந்தெடுத்துள்ளது.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இரண்டு வேகப் பந்துவீச்சாளார்கள் மற்றும் ஒரு பேட்ஸ்மேன் இடம் பிடித்துள்ளனர்.

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார்?
நடப்பு ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் எப்போது விளையாடுவார்? பதில் இதோ!

அயர்லாந்து வேகப் பந்துவீச்சாளரான மார்க் அடாய்ர் மற்றும் நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல இலங்கை அணியின் பேட்ஸ்மேன் கமிண்டு மெண்டிஸும் இந்த விருதுக்கான போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

மார்க் அடாய்ர் (அயர்லாந்து)

2019 ஆம் ஆண்டு அயர்லாந்து அணியில் அறிமுகமான மார்க் அடாய்ர், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அயர்லாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பெற இவர் உதவினார். அயர்லாந்து தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. மார்க் அடாய்ர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட்டுகளை எடுத்தார். 39 ரன்களை விட்டுக்கொடுத்த அவர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கமிண்டு மெண்டிஸ் (இலங்கை)

2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்த கமிண்டு மெண்டிஸ், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இலங்கை அணி முதல் டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, தனஞ்ஜெயா டி சில்வாவுடன் இணைந்து அபாரமாக விளையாடினார். டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த ஸ்கோரை (164 ரன்கள்) அவர் எடுத்தார்.

ஐசிசியின் மார்ச் மாத சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார்?
டி20 உலகக் கோப்பைக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்படும் பிரபல நியூசி. வீரர்?

மாட் ஹென்றி (நியூசிலாந்து)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாட் ஹென்றி அபாரமாக பந்துவீசினார். 17 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். அதில் 2 ஐந்து விக்கெட்டுகள் அடங்கும். அதேபோல அந்த டெஸ்ட் தொடரில் அவர் பேட்டிங்கில் 101 ரன்கள் குவித்து அணிக்கு உதவினார்.

இவர்கள் மூவரில் ஐசிசியின் மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com