டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை!

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா படம் | ஐபிஎல்

டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது.

ரோஹித் சர்மா
எம்.எஸ்.தோனிக்கு எதிராக எங்களது யுக்தி வெற்றி பெற்றால்... என்ன சொல்கிறார் எரிக் சைமன்ஸ்!

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ரோஹித் சர்மா அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். அவர் 63 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியில் 5 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார். டி20 போட்டிகளில் 500 சிக்ஸர்கள் விளாசி ரோஹித் சர்மா சாதனை படைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் 500 மற்றும் அதற்கும் அதிகமாக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள்

கிறிஸ் கெயில் - 1056 சிக்ஸர்கள்

கிரன் பொல்லார்டு - 860 சிக்ஸர்கள்

ஆண்ட்ரே ரஸல் - 678 சிக்ஸர்கள்

காலின் முன்ரோ - 548 சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா - 500 சிக்ஸர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com